பனிமலர்

பனிமலர்
பனிமலர்

Monday, February 3, 2025

இனத்துய்மைவாதம் vs மொழித்தூய்மைவாதம்

பெரியார் என்றுமே மொழியை வைத்தோ, இனத்தை வைத்தோ மக்களை பிளவுபடுத்தினார் இல்லை. அப்படி அவர் சொல்லியிருந்தால் அதுவும் தவறு. ஆதிக்க கருத்தியலையும் நேர்மையற்றத்தனத்தையும் மட்டுமே அவர் எதிர்த்தார் என்பது என் புரிதல். திராவிடம் என்பது ஆரியம் என்னும் ஆதிக்க கருத்தியலுக்கு எதிரான ஒரு சொல். அச்சொல்லை சுற்றி சமூகநீதி, சமத்துவம் சார்ந்த கருத்தியல் கொள்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த ஆயுதத்தை எடுத்து மற்றவர்களை வீழ்த்த நினைக்கிறீர்களோ, அதே ஆயுதத்தால் வீழ்த்தப்படுவீர்கள். அண்ணாவும், கலைஞரும் மொழியை ஒரு ஆயுதமாக எடுத்து ஆரியத்துக்கு எதிராக களமாடினார்கள். இனத்தால் பார்ப்பனியத்தை எதிர்க்கொண்டு ஒதுக்கிவைத்தார்கள். இன்று அதே மொழியால் ஒருவர் மொழித்தூய்மைவாதம் பேசிக்கொண்டு இனத்தை இரண்டாம் பட்சமாக தள்ளிவைத்து அரசியல் செய்கிறார்கள். இனிமேலாவது கொஞ்சம் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் சித்தாந்தம் அமையுங்கள்.